ஆபிரிக்காவின் தலைநகர் மொகாதிஷூவில் உள்ள ஏடன் அடே விமான நிலையத்தில் ஹல்லா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தின் தரையிறக்கும் கருவி பழுதடைந்ததால் குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தைக் கட்டுப்படுத்துவதற்கு விமானி முயற்சித்தபோதும், அது தோல்வியில் முடிந்ததால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானியின் இருக்கை பகுதி இரண்டாக உடைந்து சேதத்திற்கு உள்ளானதோடு, விமானிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 30 பயணிகளும் 4 ஊழியர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பயணிகளில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், ஏனையோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும் ஆபிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.