கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் – எடுக்கப்பட்ட தீர்மானம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வை “சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இன்று கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அழைக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகளும்  வைத்தியர் வாசுதேவ மற்றும் பிரணவன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

அதன்போது  புதைகுழி அகழ்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையிலேயே மேற்குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே வைத்தியர்களால் தயாரிக்கப்பட்ட கோவை ஒன்று காணப்படுவதாக கூறி அதற்கு அமைவாக அகழ்வை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம் எவ்வாறு குறித்த மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றத்தால் பல கட்டளைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்தோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிறுவனங்களின் அறிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கைக்காகவும் இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை மீண்டும் அழைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply