பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரு நாடுகளினதும் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தின்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான, நாட்டின் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தமைக்காக இலங்கை ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானின் உண்மையான நண்பராகவும் நலம் விரும்புபவராகவும் இருந்துள்ளமைக்கு எனது நாட்டு மக்கள் சார்பாக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மிக விரைவில் வெளிவரும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் கடினமான பொருளாதார சூழ்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் போராட்டம் மற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதி பாராட்டியதுடன் பாக்கிஸ்தானை இயல்புநிலையில் இருந்து காப்பாற்றுவதற்கு உதவுமாறு இலங்கை ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.