விரைவில் நிறைவடையவுள்ள இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு!

இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் இலங்கை மற்றும் கானாவுக்கு முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஆரம்பமாகியுள்ள, ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடன்களை பெற்றுக்கொண்ட நாடுகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு செயல்முறை பற்றிய தெளிவை வழங்க, கடன் மறுசீரமைப்பு பயனர் வழிகாட்டி அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு பூச்சிய வட்டிக் கடன்களை வழங்குவதாகவும் அது உறுதியான நிதி நிலைப்பாட்டில் வைக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு நிதி ஆதாரங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் உதவ வேண்டும் என அவற்றுக்கு உதவ அமெரிக்க திறைசேரி தயாராக உள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply