தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போது, ‘எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்’ என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடுமையாகப் பேசியுள்ளார்.
அதனையடுத்து கோபமடைந்த ரணில் பேச விரும்பினால் மட்டும் என்னுடன் பேசுங்கள். இல்லையெனில் நீங்கள் எழுந்து வெளியில் செல்லலாம், என கடும் தொனியில் சம்பந்தனை பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ‘என்னால் தரக்கூடியவற்றையே தர முடியும். 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதானால் நாடாளுமன்றில் 3இல் 2 பெரும்பான்மை அவசியம். அதனை செய்ய எம்மால் முடியாது’ என ரணில் கோபமாகவே பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.