யாழ்ப்பாணத்தில் சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அக்கா தங்கையின் தலைமுடியை கத்தியை கொண்டு வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் அளவெட்டியில் சகோதரிகள் இருவர் வசித்து வந்துள்ளனர். இதேவேளை, திருமணம் முடிந்து அக்கா என்பவர் கணவனுடன் கனடாவில் வசித்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இலங்கையில் சில நாட்கள் தங்கிருப்பதற்காக கனடாவில் இருந்து கணவனுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அக்கா தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலியை தங்கையிடம் கொடுத்து விட்டு வெளியே சென்று மாலை வீடு திரும்பி உள்ளார்.
இதையடுத்து, திங்கட்கிழமை அன்று வேறுவொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தங்கையிடம் கொடுத்த தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலியை கேட்டதையடுத்து, தங்கை தாலிக்கொடியை கொண்டு வந்து அக்காவிடம் கொடுத்துள்ளார்.
இதன்போது அக்கா தங்கையிடம் நான் தாலிக்கொடியுடன் தங்க சங்கிலியை கொடுத்தாக கூறியுள்ளார். இதற்கு தங்கை தாலியை மட்டுதான் கொடுத்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில், வாய்தற்கமாக இருந்த பிரச்சினை சிறிது நேரத்தில் பாரிய சண்டையாக உருவெடுத்தது. இதனையடுத்து இருவரும் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டைபிடித்துள்ளனர்.
அக்காவின் கணவர் இதனை அவதானித்து விரைந்து வந்து அவர்களை பிரித்து வைத்துள்ளனர். இதேவேளை அக்கா, தங்கை ஏமாற்றியதை தாங்கமுடியாமல் கத்தியை எடுத்து தங்கையின் தலை முடியை வெட்டியுள்ளார்.
இதனால் மிகவும் கோபமடைந்த தங்கை வெட்டிய தலைமுடியுடன் காவல் நிலையம் சென்று அக்கா மீது முறைப்பாட்டை அளித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.