விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ரணில் மன்னிப்பு வழங்கியது போன்று போர் வீரர்களுக்கும் வழங்க வேண்டும்!

மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதே போன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” 15, 20 வருடங்களாக விளக்கமறியலில் உள்ளவர்களை ஜனாதிபதி அவர்கள் திட்டமிட்டு மன்னிப்பதிலோ அல்லது விடுதலை செய்வதாலோ பிரச்சினை இல்லை.

மறுபுறம், போர்வீரர்கள் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளிகளாக காணப்பட்டனர். ஜனாதிபதி இந்த மக்களுக்கு மன்னிப்பு வழங்கினால், அது இந்த நேரத்தில் சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால் இந்த அத்தியாயத்தை மூட வேண்டும். புலி பயங்கரவாதிகளுக்கு மட்டும் மன்னிப்பை மட்டுப்படுத்த முடியாது.

போர் வீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், ஜனாதிபதி அவர்களை மன்னித்து இந்த அத்தியாயத்தை முடிக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை ” எனக் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply