முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் நீக்கம்!

இதுவரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதென ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது.

இவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் என்பவற்றிற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திற்கான செலவு விபரங்களை முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர், ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்த நிலையிலேயே இச் சலுகைகளை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, ஜனாதிபதி அலுவலகம் இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளின் எந்தவொரு செலவையும் தீர்க்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

தீர்ப்பின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம், வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply