நீதிக்கான போராட்டத்தால் முடங்கியது வடக்கு கிழக்கு!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணை, சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு  கிழக்கில் பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி விவகாரம், தமிழ் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடன், சர்வதேச கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியே, இன்று வடக்கு- கிழக்கில் பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான சங்கத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த போராட்டத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, தனியார் பேருந்துகளும் சில மாவட்டங்களில் போக்குவரத்து சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களின் நெடுந்தூர பேருந்துகளும் போக்குவரத்தில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹர்த்தாலுக்கு, வர்த்தகர் சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் ஆதரவினை தெரிவித்துள்ளன.

மேலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் மனித புதைக்குழி விவகாரத்திற்கு சர்வதேச மத்தியஸ்தத்துடன் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி, இன்றைய கதவடைப்பிற்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர்.

கதவடைப்பு காரணமாக, வடக்கு கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் ஆள் நடமாற்றமின்றி, வெறிச்சோடி காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply