குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரின் பிரேத பரிசோதனை இன்று

போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கை பிரஜையின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.

முதலில் நேற்று பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், சூழ்நிலை சாதகமில்லாததால் பிரேதப் பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னதாக, இறந்தவரின் மனைவி என்று கூறி மூன்று பெண்கள் ஆஜராகினர்.

அதைத் தொடர்ந்து சூழ்நிலை சாதகமில்லாததால், பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

ஓமானில் பணிபுரியும் மூன்று பெண்களில் ஒருவர், இறந்தவருக்கும் தனக்கும் திருமணமாகி 17 வருடங்கள் ஆவதாகவும், இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பான செய்தியைப் பார்த்த பின்னர் தனது தந்தையின் மரணம் குறித்து தனது பிள்ளைகளில் ஒருவர் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்து தான் இலங்கை திரும்பியதாகவும் அவர் கூறினார்.

அவரது கணவருக்கு மேலும் இரண்டு மனைவிகள் இருப்பதை அறிந்ததும், அவர் உடலை ஏற்க மறுத்துவிட்டார், ஆனால் அவரது இறுதி சடங்குகளுக்கு தன்னை அனுமதிக்குமாறு கோரினார்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 46 வயதுடைய  நபர், குவைத்தில் கடந்த ஜூலை 27 ஆம் திகதி தூக்கிலிடப்பட்டார்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துள்ள அவர், வெளிநாட்டு வேலைக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு குவைத் சென்றிருந்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply