ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பினை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி செய்யும் முயற்சிக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
எனவே, இந்த செயற்பாடு ஜனாதிபதியின் தனிப்பட்ட விரும்பமா அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடா என தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
ஜனாதிபதியின் இந்த யோசனைகள் தொடர்பாக பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்ன? இதற்கான பதிலை அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கவேண்டும்.
அதேநேரம், வடக்கு – கிழக்கில் உள்ள சிங்கள மக்களின் கருத்துக்களையும் இந்த விவகாரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படியானால் நாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக உள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.