வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு – வழங்கப்பட்ட கால அவகாசம்!

வாழைச்சேனை நாவலடி பகுதியில் சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு பொலிஸார் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக சிலர் சட்டவிரோதமாக நுழைந்து காட்டு மரங்களை வெட்டி கம்பி வேலிகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் இக்காணி அபகரிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களை சட்ட ரீதியாக அரசாங்கத்திடம் இருந்து காணியைப் பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

இக் காணி அபகரிப்பு தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையைடுத்து சம்பவதினமான நேற்றைய தினம் வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தலைமையிலான பொலிஸார் சென்று காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களிடம் குறித்த பகுதியை விட்டு வெளியேறுவதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply