வெளியானது விசேட வர்த்தமானி!

இலங்கையில், பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சார விநியோகம், பெட்ரோலியத் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட துறைகளின் கீழான சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் மேலும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளதுடன்  பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகமும் அவற்றில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளை பராமரித்தல், உணவளித்தல் மற்றும் இணைச் சிகிச்சை ஆகியவற்றிற்காக அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகள் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply