அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா எதிர்வரும் டிசம்பர் மாதம் சேவையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருடைய வெற்றிடத்திற்கு இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜா, கோபால் பாக்லேவுக்கு பதிலாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் இந்திய – ஐரோப்பிய சுதந்திர உடன்படிக்கையில் முக்கிய பங்கை வகித்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கென்பெராவுடன் இந்தியா இருதரப்பு ஒருமித்த கருத்துடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதால், அவுஸ்திரேலியாவுக்கு கோபால் பாக்லேயின் பதவி நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததென தெரிவிக்கப்படுகிறது.