இலங்கையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் தற்போது, சுகாதாரத் துறையில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவசரகால கொள்வனவின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கடன் வசதியின் கீழ் 378 வகையான மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில், உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் 23 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 46.7 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply