உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பெருந்தொகை நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பொறுப்பதிகாரி!

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சூம் தொழில்நுட்பம் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் முன்வைத்த கூற்று தமக்கு மட்டுமன்றி தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரச புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான சுரேஷ் சாலே கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்துள்ளார்.

நற்பெயருக்கும் மற்றும் உத்தியோகபூர்வ கடமைக்கும் பெரும் பாதிப்பாக அமைவதுடன் தமது பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து நிறுத்துவதற்கும் நேரலாம் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவு பிரதானியான சுரேஷ் சாலே தாக்கல் செய்துள்ள மனுவில் பிரதிவாதியாக சிறில் காமினி பெர்னாண்டோ அடிகளாரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தினருக்கு தெளிவுபடுத்தும் வகையில் சர்வதேச உண்மைக்கான பேரவை மூலம் 2021 ஒக்டோபர் 23 ஆம் திகதி சூம் தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட கூட்டத்தில் தம்மைப் பற்றி தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அதனால் தமக்கு ஏற்பட்ட அப கீர்த்திக்காக சிறில் காமினி அடிகளாரிடம் 30 மில்லியன் ரூபா நட்ட ஈடாக பெற்றுத் தருமாறும் அவர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply