சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் நாட்களில் இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இரண்டாம் கட்ட நிதியை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே அந்த குழு நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று இரண்டாம் நாளாகவும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 4.30க்கு விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இரவு 7 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்றும் இடம்பெறவுள்ளது.

நாளை மாலை 5.30 மணி அளவில் இதற்கான வாக்கொடுப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply