வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐ. நா வதிவிடப் பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ‘வடக்கு மாகாண ஆளுநர், நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் பதவியிறக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் எனவும் இது தொடர்பில் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?’ எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனவே, வெகுவிரைவில் வடக்கு மாகாண ஆளுநர் மாற்றப்படுவார் என்பது தனது கருத்து எனத் தெரிவித்துள்ளார்.