சர்வதேச நாணய நிதியம் ஆசிய பிராந்தியத்தில் செயற்படும் விதம் தொடர்பாக இலங்கையில் பரீட்சித்து பார்த்து வருவதாக ஜன அரகலய அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் இதனை கூறியதாக ஜன அரகலய அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே இலங்கைக்குள் தனது பரீட்சாத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
நாணய நிதியத்தின் இந்த கடினமான பரீட்சாத்த நடவடிக்கைகளுக்காக இலங்கை மக்கள் கடந்த காலத்தில் மிகப் பெரிய அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர்.
இலங்கையில் தமது பரீட்சாத்த நடவடிக்கைகளின் முடிவுகளை மீளாய்வு செய்வதற்காகவே நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் எனவும் வசந்த முதலிகே மேலும் தெரிவித்துள்ளார்.