உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு யாழில் ஆரம்பமானது வடக்கின் திருவிழா!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்கழம் மற்றும் சுற்றுலாத் துறை என்பவற்றின் ஏற்பாட்டில் வடக்கின் திருவிழா இடம்பெறுகின்றது.

குறித்த நிகழ்வு யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் இன்று 29 ஆம் திகதி காலை 9 மணி அளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியுள்ள நிலையில், இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளது.

வடக்கின் திருவிழா நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ளஸ் மற்றும் யாழிற்கான இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான கிராமிய நடனங்களான மயிலாட்டம், ஒயிலாட்டம், சிரட்டைக் கும்மி, வசந்தன் கூத்து மற்றும் நர்த்தனம் என்பன இடம்பெற்றதோடு, கைவினைப் பொருட்கள் விற்பனை, உணவு விற்பனை, நீர் விளையாட்டுக்கள் என்பனவும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply