இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இராமநாதபுரம் மண்டபம் அகதி முகாமிற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் நிர்மலநாதன் சென்ற போது அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்குள்ள நடைமுறைகளை பின்பற்றி சென்றிருந்த போதும் அவர் ஏதிலிகளை சந்திப்பதை முகாம் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
மண்டபம் அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை கடந்த வியாழக்கிழமை சந்திப்பதற்காக சென்றிருந்த போதே அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான வேண்டுகோள் தமிழர் தாயகத்தில் இருந்து விடுக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அகதிமுகாமில் உள்ள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமையால் ஈழத்தமிழ் அகதிகளை சந்திப்பதற்கான அவரின் முயற்சி முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான எந்த தகவலையும், தமிழக அரசு இதுவரையில் வெளியிடவில்லை.
எனினும் அங்குள்ள நடைமுறைகளை பின்பற்றி சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்திய விடயமானது, ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், விசனத்தையும் உண்டாக்கியுள்ளது.