போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நோயாளர் காவு வண்டி சாரதி தொடர்பில் உடனடி நடவடிக்கை!

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியின் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நோயாளர் காவு வண்டிக்குள் வைத்து 179 கிராம் ஐஸ் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவரைப் பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். 

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே  இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது நோயாளர்காவு வண்டி சாரதி தப்பியோடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிபவர் எனவும், தப்பியோடிய சாரதி முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுபவர் எனவும் தெரிய வந்தது.

இதனையடுத்தே போதைப்பொருள் பிரச்சனைகளுடன் தொடர்புபட்ட நோயாளர் காவு வண்டி சாரதி உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும், இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply