இலங்கைக்கு இரண்டாவது தடவையாக IMF நிதி வழங்குமா, வழங்காத என்று இருக்கின்ற நிலையில் செக்கன்ட் கிளாஸா? என்று கேட்பது தேவையான விடையமா? என சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செ.மயூரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார் என சொன்னால் தமிழ் நீதிபதிகள் தீர்ப்பை சரியாக உண்மையாக வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
அந்த வகையில் உதாரணமாக சிங்கள பிரதேசத்தில் ஒரு நீதிபதி தமிழர் தொடர்பான ஒரு நீதியை மாற்றி அமைக்குமாறு கூறினால் அந்த நீதிபதி காணாமல் ஆக்கப்படுவார் அல்லது சுட்டுக் கொல்லப்படுகின்ற மாதிரியான நிலைமை தான் ஏற்படும்.
உண்மையிலேயே இது கண்டிக்கத்தக்க ஒரு விடயம் அது மாத்திரமல்ல எதிர்காலத்திலும் தமிழ் நீதிபதிகள் சரியான முறையில் தீர்ப்பை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் நிச்சயமாக சர்வதேச விசாரனைக்கு எடுக்கப்பட வேண்டும்.
சமூக ஊடகங்களை அடக்குவதற்கு முற்பட்டால் எதிர்காலத்தில் நிச்சயமாக இந்த நெருக்கடி ஏற்படும் போது கடந்த காலங்களில் இருந்ததை விட பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
மிக சிக்கலான ஒரு காலம் ஏற்பட போகின்றது உதாரணமாக வைத்தியத்துறையை எடுத்துக்கொண்டால் நெருக்கடியான காலங்களில் வைத்தியம் பார்க்கக்கூடிய வைத்தியர்கள் எல்லோருமே வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்வதோ அல்லது பதவியை விட்டு செல்வதுமான நிலைமைதான் காணப்படுகின்றது.
ஜெர்மனியில் கடந்த சில தினத்திற்கு முன்பு இலங்கையினுடைய ஆட்சியாளர்கள் செக்கன்ட் கிளாஸா? என்று ஜனாதிபதி, கேட்டிருக்கிறார்.
மெதுவாக பொருளாதார ரீதியான சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இரண்டாவது தடவையாக இந்த நிதி கிடைக்குமா, இல்லையா என நாங்கள் சிந்தித்து கொண்டிருக்கும் நிலையில் செக்கன்ட் கிளாஸா? என்று கேட்பது தேவையான விடையமா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.