ருமேனியாவில் வேளைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி! சந்தேக நபர்களிடம் தீவிரவிசாரணை!

ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி  இரண்டரை கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த தம்பதியினர் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மாதம்பை – இரட்டைக்குளம் பகுதியில் வாடகைக்கு  தங்கியிருந்த குறித்த தம்பதியினர், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவதாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளமை முதற்கட்டவிசாரனைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த தம்பதியினர், குருணாகல் பகுதியிலுள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக கடமையாற்றுவதாக தெரிவித்து  இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்

சிலாபம், கற்பிட்டி, புத்தளம், ஆராச்சிகட்டுவ, மாரவில, நீர்கொழும்பு மற்றும் அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து  இவ்வாறு  பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதைாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply