இந்திய பிரதமரை சந்திக்கும் முயற்சியில் தமிழ்த்தேசிய கட்சிகள்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மக்களின் நிலைமை குறித்து தெளிவுபடுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்டும் நோக்கில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை அனுப்ப தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான சநத்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“உடனடியாக கடிதத்தினை அனுப்புவதா, இல்லையா என்பது குறித்து நாளை வெள்ளிக்கிழமை கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளோம்.

சில கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு வருகை தராமையின் காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லை.

13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது. தற்பொழுது நாட்டின் நிலை குறித்தும், தமிழ் மக்களது நிலை குறித்தும் 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் இந்திய பிரதமருடன் பேச்சு நடத்த நாம் ஆவலாக இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.

கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கின்ற பொழுதுதான் இது முழுமையான செயல்வடிவம் பெறும்” என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply