கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிவாளர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் ஒருவரின் வெளிநாட்டு பயணத்தடை நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதாக போலியான ஆவணங்களை அவர் தயாரித்துள்துடன் சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு போலி ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவாளருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.