சீனா சென்ற ரணிலுக்கு சிறப்பான வரவேற்பு!

பெல்ட் என்ட் ரோட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சீனா சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிறப்பான வரவேற்று அளிக்கப்பட்டது.

இன்று ஆரம்பமாகவுள்ள “பெல்ட் என்ட் ரோட்” உச்சிமாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளதுடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கையும் சந்திக்க உள்ளார்.

130 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 30 உலகளாவிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

பொது வளர்ச்சி மற்றும் செழுமை” என்ற கருப்பொருளில் குறித்த மாநாடு இம்முறை இடம்பெறுகின்றது.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் தனது விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி எதிர்வரும் 20ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருந்து பல முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply