ஜனாதிபதியே பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த அதிகாரம் அரசியலமைப்புச் சபைக்கு கிடையாது” என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படாத விவகாரம் குறித்து, நாடாளுமன்றில் இன்று ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சபையினால் பொலிஸ்மா அதிபரின் பெயரை அங்கீகரிக்க மட்டும் தான் முடியும். ஆனால், அவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த அதிகாரத்தை அரசியலமைபினாலோ, அரசியலமைப்புச் சபையினாலோ கேள்விக்குட்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதி நியமிக்கும் ஒருவரை அங்கீகாரிப்பதற்கோ அங்கீகரிக்காமல் விடுவதற்கோ அரசியலமைப்புச் சபைக்கு முழு அதிகாரம் உள்ளது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.