நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக அமைச்சரை மாற்றுவது மட்டும் தீர்வாக அமையாது என நாடாளுமன்ற உறுப்பினர் போராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதவி மாற்றமானது தலை வலிக்குத் தலையனையை மாற்றுவது போன்றது எனவும், இவை அனைத்து கண் கட்டும் வித்தைகள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இவை மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படாது. நாட்டில் இருக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கு ஒரு அமைச்சரை மாற்றி இன்னொரு அமைச்சரை நியமிப்பதன் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் கூறினால் இதனை நம்ப முடியுமா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
சங்கீதக் கதிரை விளையாட்டே இதில் இடம்பெறுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் எதிர்ப்பு எரிமலையை போன்று எரியும் சந்தர்ப்பத்தில் மக்களுக்கு அரசாங்கத்தின் பதில் இதுவாய் இருக்கின்றது என விசனம் வெளியிட்டுள்ளார்.
வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதே இதற்கான சரியான தீர்வு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.