ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கவுள்ள நிலையில் மக்கள் போராட்டங்கள் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் இவ்வாறு வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, மைட்லண்ட் வீதி, டொரிங்டன் சந்திப்பில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பத்தரமுல்லை சீலரத்ன தேரரும் கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் அவரை நடுவழியில் தடுத்தாலும், பின்னர் கடிதம் கொடுக்க அவருக்கு வாய்ப்பளித்தனர்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குவது தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.