நுவரெலியா தபால் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலிய பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர்.
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக கூறப்பட்டது.
இதையடுத்து, நாடு தழுவிய ரீதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பொன்றை தபால் ஊழியர்கள் ஆரம்பித்திருந்தார்கள்.
தபால் ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளையும் தபால்மா அதிபர் இரத்து செய்த போதிலும், தபால் ஊழியர்கள் திட்டமிட்ட வகையில் தமது பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பணிப் பகிஷ்கரிப்பின் ஒரு அங்கமாக, நுவரெலியா நகரில் பாரிய போராட்டமொன்று இடம்பெற்றது.
போராட்டம் காரணமாக நுவரெலியா நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.