அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்றை இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் புதுடெல்லியில் இன்று இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தோ பசிபிக் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கனடாவிற்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் குறித்தும் இதன்போது கலநதுரையாடப்படவுள்ளது.
இதேவேளை, சர்வதேச ரீதியில் வளர்ச்சிமிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ச்சிபெற ஆதரவு தெரிவிப்பதாகவும், இந்தோ பசிபிக்கில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முக்கியமான கூட்டு நாடாக இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.