இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இன்று அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக்கு ஜனாதிபதி இதனை அறிவித்ததாக இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய குணவர்தன குறிப்பிட்டார்.
இலங்கைக்கான 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் முதல் மதிப்பாய்வை சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று வாரியம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் மற்றும் பாரிஸ் கிளப் கடனாளர் அரசாங்கங்கள் போன்ற இருதரப்பு கடன் வழங்குநர்கள் இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கு அண்மையில் ஒப்புக்கொண்டதாக அமைச்சர் கூறினார்.