க.பொ.த. உயர்தர மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவது தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தற்போது கல்வி கற்கும் பாடசாலைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் பாடப் பிரிவு இல்லை என்றால் அந்த மாணவர்களுக்கு ஏனைய பாடசாலைகளை அனுமதிப்பதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலையில் உயர்தரக் கல்விக்குத் தேவையான பாடப் பிரிவு அல்லது பாடங்களின் சேர்க்கை இல்லை என்பதை பாடசாலை அதிபர் உறுதிப்படுத்த வேண்டும்.
உதாரணமாக, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் 182 மாணவர்கள் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர் மற்றும் கொழும்பு விசாகா கல்லூரியில் 9A சித்திகளுடன் 206 மாணவர்கள் உள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில், தற்போதுள்ள பாடசாலை அல்லது கல்வி வலயத்தினுள் பொருத்தமான கல்வித் தகைமைகளைப் பெற்றுள்ள ஆனால் பாடப் பிரிவு இல்லாத ஒரு பிள்ளைக்கு மாத்திரமே வேறொரு பாடசாலையிலிருந்து விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.