ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் முதலாவது மீளாய்வை நிறைவு செய்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றியுள்ளார்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக, அரச தலைவர் இன்று காலை பாராளுமன்றத்திற்கு வந்தடைந்தார்.
2024 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு என்று அழைக்கப்படும் குழு நிலை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6மணிக்கு நடைபெற உள்ளது.
2024 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டத்தின்படி, மொத்த அரசாங்கச் செலவீனமானது 6,978 பில்லியன் ரூபாவாக காணப்படுவதுடன் அது 2023 உடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 33%அதிகரிப்பாக கருதப்படுகின்றது.
இதேவேளை, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த நவம்பர் 13 ஆம் திகதி நாட்டின் 78வது வரவு செலவுத் திட்ட உரையான 2024 வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.