எதிர்வரும் 10 நாட்களில் இலங்கையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய, வறுமை இல்லாத நாட்டை உருவாக்க, தொழில்மயமாதல் விரிவாக்கமடையும், பொருளாதார வளர்ச்சி துரிதமாக அதிகரிக்கும், அதன் பலன்களை அனைவரும் பகிர்ந்துகொள்ளும் நாட்டை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொள்ளுமாறு 220 இலட்சம் மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் நாடளாவிய வேலைத்திட்டம் நேற்று (07) ஆரம்பமான நிலையில் இதன் கொழும்பு மாவட்டத்துக்கான வேலைத்திட்டம் நேற்று ஹோமாகம நகரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆரம்பமானது.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியில் கட்சி அங்கத்துவத்தைப் பெறாத 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் நேற்று முதல் 16 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.