இலங்கை ஜனாதிபதியின் தீர்மானங்கள், செயற்பாடுகள் மற்றும் செய்தி அறிவிப்புகளை அறிவிக்கும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு, தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுப் பிரசாரங்களை அறிவித்தால், அது தேர்தல் சட்டத்தை மீறும் மற்றும் அரச வளங்களை துஸ்பிரயோகம் செய்ததாக கருதப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் தேர்தல் ஆணையகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை காலியில் இடம்பெறும் பொதுக்கூட்டம் தொடர்பில், ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு,வட்ஸ்அப் குழுக்களின் வலையமைப்பின் ஊடாக இந்த பொதுகூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது, தேர்தல் சட்டப்படி, அரச வளங்களை துஸ்;பிரயோகம் செய்தமை தொடர்பிலான குற்றமாகும் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை¸அரச அமைப்புக்கள், ஜனாதிபதி, பிரதமர் அல்லது அமைச்சர்களுடன் தொடர்புடைய ஊடகப் பிரிவுகள், தேர்தலின் போது மேலதிகாரிகளுக்கு தனிப்பட்ட விளம்பரங்களை வழங்கவோ அல்லது கோரவோ தமது வளங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்திற்கு எதிரான குற்றத்தின் கீழ் பொதுச் சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் அல்லது தனிப்பட்ட முறையில் பயன்படுத்துதல் ஒரு குற்றவியல் குற்றமாக கருதப்படும் என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.