2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 97% விநியோகம் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 03 ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்களிப்பு அட்டை விநியோகம் செப்டெம்பர் 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இதுவரை எந்தவொரு வாக்காளரும் தங்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறவில்லை என்றால், செப்டம்பர் 18 ஆம் திகதிக்குப் பிறகு அவர்களது தேசிய அடையாள அட்டையுடன் உள்ளூர் தபால் நிலையத்திற்குச் சென்று அவர்களின் அடையாளத்தைச் சரிபார்த்து வாக்குச் சீட்டினை பெறலாம் என்று அவர் கூறினார்.
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி வரை வாக்காளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.