இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் நாடாளுமன்றில் தெரிவித்த விடயங்களாவன,
“இன்றிலிருந்து நாடாளுமன்றம் அறிவிக்கப்பட்டு மொத்தம் 64 நாட்கள் கடந்து இருக்கின்றது. இன்றைய தினம் எனது முறைப்பாடு, எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பான எனது முறைப்பாட்டின் 36 ஆவது நாட்கள் கடந்து இருக்கின்றது.
இன்றிலிருந்து 64 நாட்கள் முதன்முறையாக நான் முறைப்பாடு செய்து 36 நாட்களின் பின்னர் எனது நேரம் ஒதுக்கவில்லை என்பதற்கான விடயத்தை நாடாளுமன்றத்துக்கு சொல்வதற்கு முதலாவதாக இந்த நாடாளுமன்றம் சந்தர்ப்பம் தந்து இருக்கின்றது.
அந்த விதத்திலே எனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நான் மாற்றிக்கொள்ளுகின்றேன். 64 நாட்கள் நான் காத்து இருந்தேன் கதைப்பதற்கு நேரம் கிடைக்கும் என்பதற்காக. ஆனால் 36 ஆவது நாள் முறைப்பாட்டின் பின்னர் 3 கொமிட்டி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எனது பிரச்சினையை கதைப்பதற்கு கொமிட்டி அமைக்கப்படவும் இல்லை. அதற்குரிய கேள்விகள் கேட்க்கப்படவும் இல்லை.
எனது பிரச்சினையை கதைப்பதற்கு எனக்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கேட்டும் கூட மொத்தம் 64 நாட்கள் ஆகிவிட்டது.
64 நாட்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கதைப்பதற்கு தாங்கள் இடம் கொடுக்கவில்லை என்றால் அது அரசாங்கத்தினுடைய வெட்கம் கெட்ட செயல்.
இன்றிலிருந்து இந்த அரசாங்கத்துக்கு எனது மனதால் கொடுக்கின்ற சகல சப்போட்களையும் நான் இல்லாமல் செய்கின்றேன். இன்றிலிருந்து உண்மையான எதிர்க்கட்சியாக நான் இருப்பேன்.
என்மீது 24 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் நான் வைத்தியராக இருக்கும் போது ஒரு தனிப்பட்ட வழக்குகள் கூட என்மீது இல்லை.
ஹெட்லைட் போட்டு வாகனம் ஓடியதற்காக கைது செய்கிறார்கள். ஒரு சிங்கள எம்பியாக இருந்தால் கைது செய்திருப்பார்களா எனவும் வினவியிருந்தார்.
NPP அரசாங்கத்தின் மீது பெரிய எதிரபாப்புடன் இருந்தேன். நான் மட்டுமல்ல யாழ்ப்பாண மக்கள் பெரிய எதிற்பாப்புடன் 3 எம்பிக்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து இருக்கின்றார்கள்.
தமிழ், சிங்கள மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் உயரிய சபை ஆகிய நாடாளுமன்றத்தில் உண்மையான விடயங்களை கதைப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
சாதாரணமான ஒரு சுயேட்சை குழு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அரசாங்கம் பயப்பிடுகின்றது, உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இன்றிலிருந்து இந்த பிரச்சினையை முடித்து காட்டுங்கள்” என்று கூறினார்.