நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இடம்பெற உள்ள நிலையில், பெரஹெர நிகழ்வைக் காண ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இந்த ஊர்வலம் நிட்டம்புவ அத்தனகல்ல வீதியில் உள்ள களுவாகஸ்வில ஸ்ரீ விஜயராமய விகாரையில் இருந்து தொடங்கி, நிட்டம்புவ நகரத்தை அடைந்து, இடதுபுறம் திரும்பி கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொழும்பை நோக்கிச் சென்று, வால்வத்த சந்தியில் வலதுபுறம் திரும்பி ஸ்ரீ போதி விகாரையை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, நிட்டம்புவ நகரத்திலிருந்து மல்வத்த சந்தி வரையிலான வீதியின் ஒரு வழித்தடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கொழும்பு-நோக்கியும், கண்டி நோக்கியும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.