டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!

டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகம் செய்வதன் மூலம் வரி செலுத்துவதற்கும், வங்கிகளுடனான பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் உதவும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் தற்போது பயன்படுத்தும் அடையாள அட்டை கொஞ்சம் பழையது, இப்போது அடையாள அட்டையை எடுத்துச் சென்றால் இது நீங்களா என்று கேட்பார்கள்.

ஆனால் டிஜிட்டல் அடையாள அட்டை அப்படியில்லை. உங்களுக்கு ஒரு டிஜிட்டல் அடையாள அட்டை கொடுக்கப்பட்டால், அதைப் படிக்க முடியும். வரி செலுத்துவதற்கும், வங்கிகளுடனான பரிவர்த்தனைகள் முதல் அனைத்தையும் செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் அடையாள அட்டையை உருவாக்க 1,000 கோடி ரூபா உதவியை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இந்தியா தரவுகளைத் திருடப் போகிறது என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் அது அவ்வாறு இல்லை. இலங்கையின் மிகச்சிறந்த தரவு அறிவியல் நிபுணர்களுடன் 24ஆம் திகதி ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டோம். நாடு முழுவதும் 2,300 கிராம அளவிலான தரவு உள்ளீட்டு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் தரவை உள்ளிடும்போது, ​​இந்திய நிறுவனம் வெளியேறிவிடும். அதற்கு பின்னர் அது நமது கையில்தான் உள்ளது” என்று தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply