![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/23-647c41f60d2a8.jpg)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (09) பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், நான்காம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக உள்ளக மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.