![](https://onlinekathir.com/wp-content/uploads/2025/02/images-6.jpg)
“எல்ல ஒடிஸி நானு ஓயா” என்ற புதிய ரயில் சேவை இன்று முதல் நானு ஓயாவிலிருந்து பதுளை ரயில் நிலையத்திற்காக பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த புதிய ரயில் சேவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிக தேவை காரணமாக தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.
அதன்படி இந்த ரயில் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர வார நாட்களில் காலை 08.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பதுளைக்கும், பிற்பகல் 01.00 மணிக்கு பதுளையிலிருந்து நானுஓயாவிற்கும் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
மேலும் முதல் வகுப்பில் முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கு ஏழாயிரம் ரூபாவும், இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கு ஆறாயிரம் ரூபாவும், மூன்றாம் வகுப்பில் முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கு ஐயாயிரம் ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.