கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெரிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 78 வீதத்தாலும், சிறிய தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 88 வீதத்தாலும் அதிகரித்துள்ளதை ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்போது சந்தையில் பெரிய தேங்காய் ஒன்று 200 – 250 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் நிலையில் சிறிய தேங்காய் ஒன்று 170 – 190 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
