நீதிமன்றில் ஆஜரான யோஷித ராஜபக்ஷ!

யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷ, இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அதற்கமைய, அவரை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply