
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வருட இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதை அடுத்து நிலவும் வெற்றிடத்தை ரணில் விக்கிரமசிங்க நிரப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், எதிர்க்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் சிலரும் அவருடன் இணைய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.