கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருக்கு உதவிய, சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த பெண்ணின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தேவகே இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணே உதவியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

குறித்த பெண் சந்தேகநபர், பிரதான சந்தேக நபருக்கு துப்பாக்கியை கொண்டு வந்தவர் எனவும், நீர்கொழும்பைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி எனவும் அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சந்தேகத்திற்குரிய பெண், துப்பாக்கி வடிவத்தில் பக்கங்களை வெட்டி ஒரு குழிவான புத்தகத்திற்குள் மறைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் எடுத்து வந்ததை அவர் உறுதிப்படுத்தினார். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய பல வாயில்கள் உள்ளன, நடந்த சம்பவத்தின் குழப்பங்களின் மத்தியில் தாக்குதல் நடத்தியவர் அருகிலுள்ள வாயிலிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591727
பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591735

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள்
பெயர் – சிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
வயது – 25 வயது
தே.அ.அ.இல- 995892480V
முகவரி – 243/01, நீர்கொழுப்பு வீதி, ஜய மாவத்தை, கடுவெல்லேகம

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply