
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அந்த கடிதத்தில், வரையறுக்கப்பட்ட நிதியில் அரச வருமானத்தை வலுப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நிலையான நிதி நிலைமையை எட்டுவதற்கு அரசாங்கத்திற்கு தமது தொழிற்சங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் எனவும் இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் குறைந்த சம்பளத்தைப் பெற்ற அரச ஊழியர்களுக்கு நீதி கிடைக்க சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.