
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட முகவரியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருந்தோட்டங்களில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 260,000 இற்கும் அதிகமாக உள்ளதாக திட்டத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது அரசாங்கத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு முகவரிகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.