இராணுவத்தை விட்டு வெளியேறும் பலர் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு- சம்பத் துய்யகொந்தா!

ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பலர் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.

அத்தகைய நபர்களைக் கைது செய்ய சிறிது காலத்திற்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் உண்டு.

பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி, எதிர்காலத்தில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply